search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காம்பிர் கண்டனம்"

    புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து, இனி போர்க்களத்தில்தான் பேச வேண்டும் என கிரிக்கெட் வீரர் காம்பிர் ஆவேசமாக கூறியுள்ளார். #PulwamaAttack #GautamGambhir
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 40 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.



    இந்த தாக்குதலை பிரதமர் மோடி கடுமையாக கண்டித்துள்ளார். பயங்கரவாதிகள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாகவும், அதற்கான பெரிய விலையை அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் மோடி எச்சரித்துள்ளார். பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுப்பதற்காக பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் கவுதம் காம்பிர், டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ‘இப்போது பிரிவினைவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால் அந்த பேச்சுவார்த்தை போர்க்களத்தில் இருக்க வேண்டும். பொறுத்தது போதும்’ என்று காம்பிர் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் கூறுகையில், “நமது வீரர்கள் மீதான கொடூர தாக்குதலைக் கேட்டு கவலையும் வேதனையும் அடைந்தேன். நமது வீரர்கள் பலர் மரணம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்துள்ள வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என கூறியுள்ளார்.

    இதேபோல் ஷிகர் தவான், மயாங்க் அகர்வால், முகமது கைப், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்களும் கண்டனம் தெரிவித்து டுவிட் செய்துள்ளனர். #PulwamaAttack #GautamGambhir
    ×